Rock Fort Times
Online News

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன்- நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு… (வீடியோ இணைப்பு)

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (மே 23) கலந்து கொண்டனர். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது, விசிக தலைவர் திருமாவளவனும் விமான நிலையத்திற்கு வந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது திருமாவளவன், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமாவளவன் பகிர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்