Rock Fort Times
Online News

திருச்சி எம்.பி துரை வைகோ முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்தரையர் மணி மண்டபம் மற்றும் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்