பேரரசர் பெரும்பிடுகு முத்திரையின் 1350வது சதய விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,சமுதாய அமைப்பினரும் திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்தரையர் மணி மண்டபம் மற்றும் திருச்சி, ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர் , இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், ஒரே வாகனத்தில் 3லிருந்து 4 நபர்களை ஏற்றிக்கொண்டு ஒத்தக்கடை பகுதியில் அட்ராசிட்டி செய்தனர். போலீசார் இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். சில இளைஞர்கள் காவலர்கள் எச்சரித்தும் கேட்காமல் வீலிங் செய்து ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தும் நிக்காமல் சென்றனர். இதையடுத்து சினிமா பானியில் போலீசார் விரட்டிப் பிடித்து அவருடைய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.