எம்ஜிஆர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை… முத்தரையருக்கு பெருமை சேர்த்தவர்கள் நாங்க தான்..!- பட்டியலிட்டார் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவ சிலைக்கு
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி , சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான . நத்தம் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது: முத்தரையர் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து மரியாதை, பெருமை அளித்து வருவது அதிமுக மட்டும் தான். எம்ஜிஆர் காலத்தில் அமைச்சரவையில் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தர்வருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.அப்போது நடந்த முத்தரையர் மாநாட்டில் கலந்து கொண்டார் .அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருச்சியில் ஒத்தக்கடையில் முத்தரையர் சிலை வைக்கப்பட்டு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தார். இங்கு சிலை வைக்கப்பட்டதன் மூலம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இருந்தது.அதன் பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுத்தார். பொதுவாக அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், பல திட்டங்களையும், பணிகளையும் ஸ்டாலின் திறந்து வைப்பது வழக்கம்.அதுபோல முத்தரையர் மணிமண்டபத்தையும் அவர் திறந்து வைத்தார். முத்தரையர் சமுதாயத்திற்கு பெருமையை தேடி கொடுத்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆவார்கள். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முத்தரையர் சமுதாயத்திற்கு பெருமையை தேடி கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி,அண்ணாவி,மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் வனிதா, பத்மநாதன்,திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி,
இளைஞர் அணி ரஜினிகாந்த்,இலக்கிய அணி பாலாஜி,பகுதிச் செயலாளர்கள் என். எஸ். பூபதி அன்பழகன், நாகநாதர் பாண்டி,ரோஜர் , கலிலுல் ரகுமான், புத்தூர் ராஜேந்திரன்,ஏர்போர்ட் விஜி, கலைவாணன்,ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,புத்தூர் பாலு, இளைஞரணி சில்வர் சதீஷ்குமார், டி.ஆர்.சுரேஷ் குமார்,கலைப்பிரிவு உறையூர் சாதிக் அலி,முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின்ஜெயகுமார்,வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், கௌசல்யா,நிர்வாகிகள் இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், எம்.ஜே.பி .வெஸ்லி, வசந்தம் செல்வமணி,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, ரமணி லால்,குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன், கேடி. அன்பு ரோஸ் கேடிஏஆனந்தராஜ்,அப்பா குட்டி. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ)பே.சுப்ரமணியன், அவைத் தலைவர் சமயபுரம் ராமு,ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன்,இலக்கிய அணி ஸ்ரீதர்,மாணவரணி அறிவழகன்,எம்ஜிஆர் மன்றம் அறிவழகன் விஜய், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் திருப்புகழ், இளைஞர் அணி தேவா. புங்கனூர் கார்த்திக்,ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், கோப்பு நடராஜ், பொன் காமராஜ் ஜெயக்குமார்,அழகாபுரி செல்வராஜ், ஆதாளி,பகுதிச் செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன்,நிர்வாகிகள் வி.என்.ஆர்.செல்வம் தமிழரசன்,துறையூர் பிரகாஷ் கவிதை மணி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி,பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி,எம்ஜிஆர் இளைஞர் அணி சண்முக பிரபாகரன்,நகரச் செயலாளர் எஸ்.பி. பாண்டியன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா,பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ்குமார்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே டி கார்த்திக், ராவணன்,சூப்பர் நடேசன் நிர்வாகிகள் தண்டபாணி, பாலசுப்பிரமணியன், பாஸ்கர் தெய்வ மணிகண்டன்,வழக்கறிஞர் எஸ்.பி கணேசன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.