Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி எஸ்.பி. அதிரடி..! (வீடியோ இணைப்பு)

திருச்சி,சமயபுரம் அருகே   தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் சூழலில் வெளி மாவட்ட மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மே 17ம் தேதி இரவு 3 இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், திடீரென  மாணவர்கள் தங்கி  இருக்கும் அறைகளின் கதவை  அடித்து உடைத்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பயத்தில் கூச்சலிடவே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மாணவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் தங்களது அறையை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து மாணவர்களை மண்டியிட வைத்த மர்ம நபர்கள் அவர்களின் தங்க செயின், வெள்ளி செயின், பணம் மற்றும் மாணவர்களிடம் இருந்து 12 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து! தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த வினோத், சந்தோஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம், லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து மர்ம கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து லால்குடி டிஎஸ்பி மேற்பார்வையில் சமயபுரம் பொறுப்பு ஆய்வாளர் கருணகரன், மற்றும் சிறுகனூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட இரண்டு தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்கள் இனாம் சமயபுரம் அருகிலுள்ள பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்து. அதனைத்தொடர்ந்து நேற்று ( மே 22 ) போலீசார் இனாம் சமயபுரம் பகுதியில் பதுங்கி இருந்த 10 நபர்களை பிடித்தனர். அப்போது அதில் ஒருவர் போலீசாரிடமிருந்து ஒப்பி ஓடினர். அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரிடம் பிடிபட்ட 9 நபர்களை சமயபுரம் காவல்நிலையம் அழைத்து வந்தூ விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (16),தமிழ்ச்செல்வம் (17),சரண் (19),முருகன் (19),தங்கமுத்து (19),தனுஷ் குமார் (16),ரங்கசாமி (19),ஜாஹித் உசேன் (17),நடராஜ் (19) ஆகியோர் கைது செய்ததோடு 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்