Rock Fort Times
Online News

அலங்கார மீன் வளர்க்க பெண்களுக்கு மானியத்துடன் கடனுதவி- * விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் மகளிர் பிரிவில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் 60 விழுக்காடு மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மகளிர் 15 நாட்களுக்குள் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன்
(ஆதார், ரேஷன் அட்டை, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் – தரை தளம், கொட்டப்பட்டு, திருச்சி- 620 023 என்ற முகவரியில் இயங்கிவரும் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431 -2421173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்