பாலியல் புகாரில் சிக்கிய திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கட்சிப் பதவி பறிப்பு…* துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை…!
அரக்கோணத்தில் தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர், அண்மையில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், தெய்வச் செயல் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போல இந்த சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் தொடர்புடைய நபர்களையும் கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்தநிலையில், தெய்வச்செயல் மீது திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வசெயலை அப்பொறுப்பில் இருந்து நீக்கிய அவர், அப்பொறுப்பில் ம.கவியரசு என்பவரை நியமனம் செய்துள்ளார்.
Comments are closed.