17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!
தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், மருந்து பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். சாலை போக்குவரத்து திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீட்டு கொள்கையை ரத்து செய்ய வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று(20-05-2025) திருச்சி பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன் எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஜோஸப் நெல்சன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்கள் சி.ஐ.டி.யு ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், ஐ.என்.டி.யு.சி மாவட்ட செயலாளர் வெங்கட் நாராயணன், எச்.எம்.எஸ் ஜான்சன், ஏ.ஐ.சி.சி.டி.யூ ஞானதேசிகன், எல்.எல்.எப் தெய்வீகன், பெடரேசன் சிவசெல்வம், தொமுச மாநில பேரவை செயலாளர் எத்திராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.