Rock Fort Times
Online News

ரூ.200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் “ரெய்டு”…!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சேவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் சேவூர் ராமச்சந்திரன். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் இன்று(17-05-2025) காலை முதல் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சேவூர் ராமச்சந்திரன் மகன்களான விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுகவில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.200 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்ததாகவும், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்