பிளஸ் – 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்னேஷ்ராஜா மகன் ரோஹித் சாதனை…!
பிளஸ் – 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்னேஷ்ராஜா மகன் ரோஹித் சாதனை படைத்துள்ளார். இவர், திருச்சி சௌடாம்பிகா பள்ளியில் பயின்றார். இந்த ஆண்டு(2025) பிளஸ் -2 தேர்வு எழுதினார். இதில், ரோஹித் அறிவியல் பிரிவில் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதோடு வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதுகுறித்து சௌடாம்பிகா கல்வி குழுமங்களின் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்த ஆண்டு(2025) நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சௌடாம்பிகா கல்வி குழும மாணவ-மாணவிகள் பல்வேறு சாதனைகள் படைத்தனர். பிளஸ்-2 மாணவன் ரோஹித் அறிவியல் பிரிவில் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதோடு வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து மாணவன் கவின் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்று பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவி ஹாசினி உயிரியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். 45 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் இவான் கோஷி ராஜன் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி ரீமா சபிய் யாஹ் 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் பெற்றனர். 480 க்கு மேல் 17 மாணவர்களும், 450 க்கு மேல் 138 மாணவர்களும் பெற்றுள்ளனர் என்று கூறினார். இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த கல்வி இயக்குனர், முதல்வர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சாதனை படைத்த மாணவ, மாணவிகள் ஆகியோரை சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி மற்றும் செயலாளர் செந்தூர் செல்வன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
Comments are closed.