மே 29(வியாழக்கிழமை) மற்றும் 30(வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர். எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகின்ற 29., 30 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், மாவட்டப் பொறுப்பாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.