Rock Fort Times
Online News

கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி-கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை…! * திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு…

திருச்சி, தாராநல்லூர், பூக்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவரை கடந்த 04-06-2021 அன்று அவரது மனைவி ரஹ்மத் பேகம் மற்றும் அவரது கள்ளக்காதலன் அப்துல் அஜீஸ் ஆகியோர் சேர்ந்து பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, மயங்கி விழுந்த நிலையில் தலையணையால் அமுக்கி கொலை செய்தனர். இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஹ்மத் பேகம் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று(15-05-2025) தீர்ப்பளிக்கப்பட்டது. கணவரை கொலை செய்த ரஹ்மத் பேகம் மற்றும் அவரது கள்ளக்காதலன் அப்துல் அஜீஸ் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக கே.பி.சக்திவேல் வாதாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்