தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம், அன்பழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலில் யார், யார் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். மக்களின் மனநிலை எப்படி உள்ளது. மக்களுக்கு மேலும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டறிந்தோம். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். திமுக அரசின் நிறைய திட்டங்கள் பெண்கள் மத்தியில் சென்றடைந்துள்ளன. புதிய திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும். அதனை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்வார்கள். எனவே, திமுக பக்கம்தான் மக்கள் இருப்பர். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
Comments are closed.