Rock Fort Times
Online News

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு திருச்சியில் இலவச பயிற்சி…!

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் நாளை (மே 15) நடக்கிறது. திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மற்ற பயிற்சியானது கட்செவி அஞ்சல் குழு மூலம் மாலை 6 மணிக்கு வினா விடைகள், காணொளியில் பகிரப்படும். இப்பயிற்சி வகுப்பானது, ஜூலை 1ம் தேதி முடிவடையும். தேர்வை சிறப்பான முறையில் எழுதுவதற்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 80722 26768 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மைய நூலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்