திருச்சி மாநகரத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் 139 -வது மே தின கொடியேற்று விழா நடந்தது. ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை பகுதி, பாலக்கரை, மார்க்கெட், ஜங்ஷன், காட்டூர், ஏர்போர்ட் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஸ்டாண்டு சுமைப்பணி, தரைக்கடை, மின்வாரியம் போக்குவரத்து பணிமனை உட்பட மொத்தம் 122 இடங்களில் சி.ஐ.டி.யு. கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன், தலைவர் சீனிவாசன், பொருளாளர் மணிகண்டன், தரைக்கடை எஸ்.செல்வி, கணேசன், சுமைப் பணி சிவக்குமார் சாலை சந்திரன் உட்பட அந்தந்த பகுதி சி. ஐ.டி.யு. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து இன்று மேதின ஊர்வலம் பாலக்கரை ரவுண்டானாவில் துவங்கி மரக்கடையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
Comments are closed.