தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கருணாநிதி சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மண்டல தொமுச பொதுச் செயலாளர் ஜோசப்நெல்சன் முன்னிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் மு.கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சிலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே 1 தின நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.