அனைத்து வார்டு மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்க கோரி திருச்சி மாநகராட்சி முன்பு அமமுக ஆர்ப்பாட்டம்..!- நிர்வாகிகள் ராஜசேகரன், செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அனைத்து வார்டு மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்க கோரியும், உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், மந்தகதியில் நடைபெற்றுவரும் திருச்சி மாரிஸ் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரியும், பஞ்சப்பூரில் மக்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட பசுமை பூங்காவை அழித்து புதிதாக மார்க்கெட் அமைப்பதை கைவிடக் கோரியும் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று(28-04-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி தலைமையிலும், தலைமை நிலைய செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்டத் துணைச்செயலாளர் தன்சிங், பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு, கல்நாயக் சதீஷ்குமார், சங்கர், மதியழகன், ஐடி பிரிவு தருண், வர்த்தக பிரிவு செயலாளர் ராஜா ராமநாதன், பேரவை பெஸ்ட் பாபு, கென்னடி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், பேரூராட்சி, வட்டச் செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Comments are closed.