த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கோவை சென்றார். இன்றும் ( ஏப்ரல் 27) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், கோவை-அவினாசி ரோடு லீமெரிடியன் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று, விஜய் தங்கி இருந்த நட்சத்திர விடுதி முன்பு தொண்டர்கள் குவிந்தனர். தவெக தலைவர் விஜய் வரும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. வழி நெடுக விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தவெக நிகழ்ச்சிக்கு வந்த விஜய், மேடையிலிருந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தார். கருத்தரங்கின் 2ம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட முகவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பவர் பேசினர். பின்னர், தலைவர் விஜய் பேசுகையில், மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறுவாணி நீர்போல தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி சுத்தமான ஆட்சியாக அமையும். ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
Comments are closed.