சிறுபான்மையினர் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டு எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது… * திருச்சியில் நடந்த திமுக கருத்தரங்கில் எஸ்.வி.சேகர் பேச்சு..!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர், புலவர் சண்முகவடிவில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் எஸ்.வி.சேகர் பேசுகையில், பிற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது.
இக்கூட்டத்தில் இவ்வளவு பெண்கள் வந்துள்ளீர்கள். பாஜகவினர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். இங்கு வாசலில் பாஜகவினரா பாதுகாப்பு கொடுக்கிறார்கள்?. அவர்கள் பாதுகாப்பு கொடுக்காத வரை உங்களுக்கு நல்லது . அதிமுகவில் என்ன சேர அழைத்ததும் ஜெயலலிதா தான். கட்சியை விட்டு வெளியே அனுப்பியதும் ஜெயலலிதா தான். அதன்பிறகு தான் தெரிந்து கொண்டேன் கட்சியில் நேர்மையாக இருக்கக் கூடாது என்று. தொடர்ந்து காங்கிரஸில் சேர்ந்தேன். அதிலிருந்தும் வெளியே அனுப்பி விட்டார்கள். என்னடா எல்லா கட்சியில் இருந்தும் நம்மை வெளியேற்றுகிறார்களே… நாமே வெளிவர வேண்டும் என நினைத்த கட்சிதான் பாஜக. சேராத இடம் தன்னை சேர்ந்து இப்படி ஆகிவிட்டேன் என நினைத்தேன். இதற்கு மேல் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன், சேர்வது வெளியே வருவது ஆட்டம் இனி இருக்காது. ஒருவரின் நம்பிக்கை விஷயத்தில் தலையிடாத வரை சமூகத்தில் எந்த ஒரு பிளவும் ஏற்படாது. பிரதமர் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதினால் தமிழில் எழுத வேண்டும் என்கிறார் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதினாலே அவருக்கு புரியாது. இதில் தமிழில் எழுதி புரியப் போகிறதா?. திருக்குறள் சொன்னால் ஓட்டு விழுமா? திருவள்ளுவரை வைத்து நம்மிடமே பிசினஸ் செய்ய பார்க்கிறார்கள். 150-க்கும் மேற்பட்ட தேசம் சென்றுள்ள பிரதமர் 150 மொழியா பேசி வருகிறார்? ஒரு மொழியை தானே பேசுகிறார்.
ஒவ்வொரு கட்சியிலும் அடுத்தது யார் என்று தெரியாமல் உள்ள நிலையில் திமுக அடுத்த தலைமுறையை தயாராக வைத்துள்ளது.
சவுக்கடி என்றால் கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.யாருக்கும் வலிக்காத சவுக்கடி அது. திருவண்ணாமலையில் பாஜகவில் அல்ல. செருப்பு தானமாக கொடுத்தால் தரித்திரம் நம்மை விட்டுப் போனதாக அர்த்தம். எனவேதான் அண்ணாமலைக்கு
நைனார் நாகேந்திரன் செருப்பை வழங்கி உள்ளார். பாஜக என்பது அசைக்க முடியாத பாறாங்கல். அதை கட்டிக்கொண்டு யார் கடலில் குதித்தாலும் பாறைக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பாறையை கட்டிக் கொண்டு குதித்தவர்கள் தான் ஒன்றும் இல்லாமல் போவார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் நிலை இது தான். தமிழகத்தின் சிறுபான்மையினர் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டு எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. கடவுள் இல்லை என திமுக சொல்லவில்லை அதை சொன்னது தி.க. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை. ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வரும் பொழுது தான் திருட்டுத்தனம் வந்து விடுகிறது. 70, 75 வயதில் தள்ளாடி தடுமாறுவதை விட இளைய தலைமுறைக்கு வழி விட்டு செல்வது நல்லது என்கிற அடிப்படையில் இனி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. மூத்தவர்கள் வழி காட்ட வேண்டும் இளம் தலைமுறை சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று பேசினார்.
*
Comments are closed.