Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 61-வது வார்டில் கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய அறை… * மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார்…!

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61-ல் திருச்சி மாநகராட்சி மற்றும் டி.எஸ்.என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஏர்போர்ட் ஆகியவை இணைந்து நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளன. இதற்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா அலுவலகத்தை மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார். கண்காணிப்பு கேமராவை காவல்துறை துணை ஆணையர் டி.ஈஸ்வரன் இயக்கி வைத்தார். விழாவில் மாநகராட்சி மண்டல தலைவர் த.துர்கா தேவி, உதவி ஆணையர் சண்முகம், காவல் துறை உதவி ஆணையர் டி. விஜயகுமார் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்