Rock Fort Times
Online News

லால்குடியில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்…* ஆலோசனைக் கூட்டத்தில் கே.என்.அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்…!

திருச்சி கோட்ட ரயில்வேயில் நடந்து முடிந்த திட்டப் பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் மற்றும் நடைபெற உள்ள பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மண்டல ரயில்வே பயிற்சி பள்ளியில் நேற்று( ஏப்ரல் 23) நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்பிக்கள் துரை வைகோ (திருச்சி), கே.என்.அருண் நேரு (பெரம்பலூர்), முரசொலி (தஞ்சாவூர்), சுதா (மயிலாடுதுறை) விஷ்ணு பிரசாத் (கடலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை),செல்வராஜ் (நாகப்பட்டினம்) ரவிக்குமார் (விழுப்புரம்), வைத்திலிங்கம் (புதுச்சேரி), டெல்லி மேலவை எம்பிக்கள் கல்யாணசுந்தரம், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அருண் நேரு எம்.பி. பேசுகையில், லால்குடி ரயில்வே நிலையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். லால்குடி மூன்றாவது நடைமேடையை உயர்த்த வேண்டும். சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை- ராமேஸ்வரம், சென்னை – சேது எக்ஸ்பிரஸ், சென்னை- மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் லால்குடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். லால்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வடிகால் மற்றும் மின்விளக்கு அமைப்பு தர வேண்டும். அப்பாதுரை ஊராட்சியில் ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும். புள்ளம்பாடி- திருமழபாடி சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். லால்குடி- மணக்கால் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும். பிச்சாண்டார் கோவில் ஊராட்சி கள்ளத்தெரு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள மக்கள் இறந்த தங்களது உறவினர்களின் உடல்களை அடக்கம் செய்ய ரயில்வே கிராசிங்கை கடந்து நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருக்கும் இடுகாட்டுக்கு சென்று வந்தனர். இங்கு இருவழி ரயில் பாதை அமைத்த பிறகு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி மேம்பாலத்தின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு சுரங்கப்பாதை அமைத்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்