சொத்துக்குவிப்பு வழக்கு;- அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!
தி.மு.க., பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன். தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் இன்று(23-04-2025) ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்து சாட்சி விசாரணையை துவங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
Comments are closed.