திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அவர்களது பதிவு மூப்பு விவரங்கள் அப்படியே தொடரும். மேலும், விவரம் தேவைப்படுவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
Comments are closed.