Rock Fort Times
Online News

போப் பிரான்சிஸ் மறைவு:- இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு- * தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்…!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும், ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிக்காவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது. ரோமுக்கு செல்லும் போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிக் காவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார். இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் (22-04-2025), நாளையும் (23-04-2025) துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்றும் (செவ்வாய்), நாளையும் (புதன்கிழமை) இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கின் நாளில் ஒரு நாள் மாநிலம் சார்பில் துக்கம்
அனுசரிக்கப்படும் (இறுதிச் சடங்கின் தேதி தனியாக அறிவிக்கப்படும்) மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்