திருச்சி மாநகராட்சி 14வது வார்டில் 10 நாட்களுக்குள் சாலை வசதி..!- அதிமுக கவுன்சிலர் போராட முயன்றதால் அதிகாரிகள் சமாதானம்!
திருச்சி மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் தார் சாலை அமைக்க வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் மற்றும்பொதுமக்கள் பல நாட்களாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர் அரவிந்தன் பொதுமக்களுடன் இணைந்து அந்தப் பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்றார். அப் போது தகவல் அறிந்து மாநகராட்சி உதவி செய்ய பொறியாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சு வார்த்தையில், 10 நாட்களுக்குள் ரோடு போடப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
Comments are closed.