பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 15 ஆண்டுகள் தனியாருக்கு குத்தகை…- நிர்வாக அனுமதி கோரியது திருச்சி மாநகராட்சி !
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலையை குறைக்கவும், மக்கள் சிரமத்தை போக்க ஏதுவாகவும் திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. வருகிற மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட இருப்பதாகவும், அதற்கான நிர்வாக அனுமதிகோரி தமிழ்நாடு அரசுக்கு திருச்சி மாநகராட்சி கருத்துரு அனுப்பியது. திருச்சி மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.