திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு “கலைஞர் பெயர்”..!- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…
திருச்சி, பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்படவிருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதற்கான சிறப்பு தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. திருச்சி, மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, துணை ஆணையர் க.பாலு, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது வருகிற மே 9ம் தேதி திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம், மற்றும் லாரி முனையம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் சுமார் 50,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்படி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் பெயரும், லாரி முனையத்திற்கு அண்ணா பெயரும், ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட்டிற்கு தந்தை பெரியார் பெயரும் வைப்பது என்று இக்கூட்டத்தில் முடிவுவசெய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.