இரவு 10 மணி வரை செயல்படும் மது கடைகளை 8 மணிக்கு மூட நடவடிக்கை… * டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்!
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, இரவு 10 மணி வரை செயல்படும் டாஸ்மாக் கடைகளை 8 மணிக்கு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று(10-04-2025) போராட்டம் நடந்தது. அதேபோல, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜா முகமது, நாம் தமிழர் கட்சி பெல் தொழிற்சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் முசிறி ராஜா, மணப்பாறை செல்வன், அண்ணாதுரை, லால்குடி பெருமாள், துறையூர் அன்பழகன், சமயபுரம் சுப்பிரமணி உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.

Comments are closed.