மத்திய அரசு நிதி தராவிட்டாலும் தமிழகத்தை சிறப்பாக நிர்வகித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் பழைய குட்செட் ரோடு, ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். 21 -வது வட்ட செயலாளர் தர்கா முபாரக் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மே.மதிவதனி, கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கான் பொன்.செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Comments are closed.