வக்ஃபு திருத்த மசோதாவை கண்டித்து திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது…!
வக்ஃபு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருத்தப்பட்ட வக்ஃபு மசோதாவை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று(05-04-2025) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் யஹ்யா தலைமையில் ஊர்வலமாக வந்த மாவட்டத் தலைவர் ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.