திருச்சி பார்வையற்றோர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்:- சந்தேகம் இருப்பதாக மாணவியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி !
திருச்சி, புத்தூர் பகுதியில் அரசு பார்வையற்றோர் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், கடந்த மாதம் விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணத்தில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என பார்வையற்றோர் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மாணவியின் தாய் கமலா கூறும்போது., “என்னுடைய மகளுக்கு பார்வை குறைபாடு உள்ளது. அவரால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியாது. 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு வீட்டிற்கு வந்த அவர்,தேர்வு முடிந்த உடன் கல்லூரியில் சேர வேண்டும் என என்னிடம் நன்றாக பேசிவிட்டு தான் சென்றார். இந்த நிலையில், பள்ளியில் இருந்து போன் செய்து உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்கள். இது நம்பும்படியாக இல்லை. உண்மையான காரணம் என்ன ? என்று கேட்டபோது, அவள் காதலித்து வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்கள். பார்வை குறைபாடு உள்ள என்னுடைய மகள் எப்படி காதலிக்க முடியும் ? அவர்கள் கூறுவது . சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது. எனவே இதில் நேர்மையான விசாரணை நடத்தி என்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Comments are closed.