Rock Fort Times
Online News

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க திருச்சி சிக்னலில் தற்காலிக கூரைகள் அமைப்பு! ( வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. திருச்சியை பொருத்தவரை வேலூருக்கு அடுத்தபடியாக சராசரியாக. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மிக முக்கியமாக அலுவலக வேலை, பணி நிமித்தமாக, மதிய வேளையில் பைக்கில் செல்பவர்கள் உச்சி வெயிலின் தாக்கத்தால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் சிரமத்தை குறைக்க திருச்சிமாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான திருச்சி புத்தூர் ரால்ரோடு சிக்னலில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது வாகனஓட்டிகளுக்கு சற்று இளைப்பாற வசதியாக இருக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்