Rock Fort Times
Online News

திருச்சியிலிருந்து துபாய் செல்ல இருந்த ஏர் இண்டியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!- பயணிகள் பரிதவிப்பு…(வீடியோ இணைப்பு)

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ( ஏப்ரல்- 4 ) காலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 113 பயணிகள் பயணம் செய்யத் தயாராகினர்.
ரன் வேயில் சிறிது தூரம் சென்றபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விமானம் ஏர்போர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டது . அதன் பின்னர் தொழில் நுட்ப வல்லுநர்கள் விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சரி செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. விமானத்திலிருந்த 113 பயணிகளும் இறக்கி விடப்பட்டு ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டனர்.தொழில்நுட்ப வல்லுனர்கள் வருகைதந்து விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பான சூழல் உருவானது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்