கே.என்.ராமஜெயம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராம ஜெயத்தின் 13வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், ராஜ்முகம்மது, பாபு, விஜயகுமார், மணிவேல், மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கான், தமிழ்ச்செல்வன், பொன்செல்லையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.