காவல்துறையில் 10 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.அபிநவ் குமார் – மதுரை சரக டி.ஐ.ஜி., ஆகவும், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மூர்த்தி – ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானி நெல்லை சரக டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
திருப்பூர் சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனர் சுஜாதா- ஈரோடு எஸ்.பி., ஆகவும், ஈரோடு எஸ்பி ஜவஹர்- சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி. ஆகவும், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் – சென்னை உளவுப்பிரிவின் துணை கமிஷனர் ஆகவும், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன் – சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகவும், சென்னை நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனர் மேகலினா ஐடன்- சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும், சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஹரி கிரண் பிரசாத் – சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனர் ஆகவும், பழநி, தமிழக போலீஸ் சிறப்பு படை பிரிவு 14வதுபட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திக் – சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Comments are closed.