Rock Fort Times
Online News

திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை நிறுவனர் ப.சங்கருக்கு சிறந்த சமூக பணியாளர் விருது…! * பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூக பணித்துறை ஆண்டுதோறும் சமூக பணியில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வீவிங் -2025 என்ற பெயரில் சமூகப் பணித்துறையில் சிறந்து விளங்குபவர்களை கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்தனர். அந்தவகையில் பேராசிரியர்கள் மற்றும் சமூகப் பணியில் சிறந்து விளங்கும் 15 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் ப.சங்கரும் ஒருவர். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை கேம்பசில் நடைபெற்றது. நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர். காளிதாசன், பல்கலைக்கழக சமூக பணித்துறை தலைவர் ஜே.ஒ.ஜெரிடா ஞானஜெனி எல்ஜோ பங்கேற்று ப.சங்கர் உள்ளிட்டோருக்கு “சிறந்த சமூக பணியாளர்” விருதுகளை வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திருச்சியில் பயிலும் அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். ஒயிட்ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் முனைவர் ப. சங்கர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அண்மையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மை குறித்து கருத்துரங்கம் ஒன்றையும் நேரு யுவகேந்திராவுடன் இணைந்து நடத்தினார். இதுபோன்று எண்ணற்ற சமூக சேவை பணிகளில் அவர் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவரது சேவைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், இதனை ஏற்படுத்திக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் மற்றும் என்னோடு பயணிக்கும் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். நீங்களும் அவரை பாராட்ட விரும்பினால் இதுதான் அவரது செல்போன் எண்: 97901 83636

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்