தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநர் (டிஜிபி) வன்னியபெருமாள், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று (மார்ச் 24) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ரயில் நிலைய நடைமேடைகளுக்குச் சென்று, பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து காவல்துறையினருடன் கலந்தாலோசனை நடத்தினார். மேலும் ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பணி மாறுதல் உள்ளிட்ட போலீசார் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது, திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன், துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, ஜங்ஷன் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் மோகனசுந்தரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Comments are closed.