திருச்சி, தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா… * ஏப்ரல் 3-ந் தேதி தேரோட்டம், குட்டி குடித்தல் நிகழ்ச்சி!
திருச்சி, தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று தாயாருக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 31 -ந் தேதி இரவு மறுக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 1-ந்தேதி காளி அவிட்டம், அம்பாள் புறப்பாடு நடக்கிறது. 2-ந் தேதி சுத்த பூஜை, வீதி உலா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 3 – ந்தேதி தேரோட்டம், குட்டி குடித்தல், நிகழ்ச்சி நடக்கிறது.
4 -ந்தேதி மஞ்சள் நீராட்டு, வீதி உலா நிகழ்ச்சியும், 5-ந் தேதி அம்பாள் குடி புகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவம், மாலையில் 6 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தெய்வீக மகா சபையினர் செய்து வருகின்றனர்.
Comments are closed.