திருச்சி, அரியமங்கலம், உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிரம்பையன்.இவரது மகள் பிரியா (20).இவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, பால்பண்ணை, ரயில்வே பாலம் அருகே சென்றுகொண்டிந்தார். பின்னால் அவரது உறவினர் மதன் அமர்ந்திருந்தார். அப்போது அதே வழியாக அதிவேகமாக வந்த பஸ் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் பிரியா துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவருடன் வந்த மதன் இடது கையில் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து குறித்து பிரியாவின் தோழி ஸ்ருதி அளித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.