Rock Fort Times
Online News

ஹோலி பண்டிகை- திருச்சியில் கோலாகல கொண்டாட்டம்

வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று ( மார்ச் -14 ) கொண்டாடப்படுகிறது. பக்த பிரகலாதனின் வரலாற்றோடு இணைந்த பண்டிகையின் முதல் நாள் நிகழ்வான ஹோலிகா தகனம் இன்று நடைபெறுகிறது. அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகசிபு, தனது மகன் பிரகலாதன் மகா விஷ்ணுவின் பக்தனாக இருந்ததால், அவனை கொல்ல சகோதரி ஹோலிகாவின் உதவியை நாட, அவள் பிரகலாதனை கொல்லும் முயற்சியில் மாண்டுபோனாள். அவள் நெருப்பில் எரிந்து சாம்பலானதை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி இன்று ஹோலிகா தகனம் உற்சாகமாக நடைபெறுகிறது. அத்துடன் பெரும்பாலான இடங்களில் இன்றே வண்ணங்களை பூசி ஹோலி கொண்டாட்டத்தையும் தொடங்கிவிட்டனர். நாளை வரை இந்த உற்சாக கொண்டாட்டம் நீடிக்கும். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் நடு குஜிலி தெரு, பெரிய கம்மாளர் தெரு, அண்ணாமலை நகர் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் குடியிருக்கும் பகுதியில் வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் பூசியும், உற்சாகமாக நடனமாடி வாழ்த்துக்களை தெரிவித்தும் ஹோலிப் பண்டிகை கொண்டாடினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்