பார்வையற்ற மாணவி மர்ம மரணம்…- மார்ச்- 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு மாநில மாற்று திறனாளிகள் ஆணையம் உத்தரவு..!
திருச்சி, புத்தூர் பகுதி அருகேயுள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி (வயது18) பள்ளி வளாகத்தில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவி மரணம் குறித்து வருவாய் துறை அதிகாரியால் முறையான விசாரணை நடத்தப்பட்டதா? அவ்வாறு நடத்தப்பட்டது என்றால், அந்த விசாரணையில் முடிவு விவரங்கள் என்ன? என பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி பார்வைத் திறன் குறைபாடு உடைய பட்டதாரிகள் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் மார்ச் -20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என,மாநில மாற்றுத்திறனாளிகள் , ஆணையர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.