இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி மாசி மாத பௌர்ணமி நாளான இன்று ( மார்ச் 14 ) சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடைத்திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 6 மணி அளவில். கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிளக்கு பூஜையில் திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
Comments are closed.