திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு!- விண்ணப்பித்து பயனடைய கலெக்டர் அழைப்பு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எம். பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., திருச்சி மாவட்டத்திற்குட்பட்டை மணப்பாறை, துறையூர் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடம் ரூ.60,000 மாத ஊதியத்திலும்; செவிலியர் பணியிடம் ரூ.18,000 மாத ஊதியத்திலும் பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடம் ரூ.14,000 -மாத ஊதியத்திலும், மருத்துவமனை பணியாளர் பணியிடம் ரூ.8,500 மாத ஊதியத்திலும் நிரப்பப்பட உள்ளது. இந்தத் தேர்வானது முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது. இதேபோல, திருச்சி மாநகராட்சி பகுதிகுட்பட்ட 11 நகர்நல சுகாதார மையங்களுக்கும் மருத்துவர், செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. மணப்பாறை, துறையூர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, திருச்சி என்ற முகவரியிலும் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகர்நல சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி நகர் நல அலுவலர், மாநகர நல அலுவலகம், பாரதிதாசன் சாலை, கன்டோன்மெண்ட் திருச்சி என்ற முகவரியிலும் வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.