சீதோஷண நிலையில் மாற்றம் :- அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்தால் திருச்சி மக்கள் அவதி…! (வீடியோ இணைப்பு)
வழக்கம்போல் இல்லாமல் சீதோஷண நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், வியர்வையில் வாகன ஓட்டிகள் குளித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து சற்று ஆறுதல் அளித்தது. இதனால் பூமி குளிர்ந்து குளிர்ச்சி நிலவியது. இந்தநிலையில் இன்று(13-03-2025) அதிகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டமாக இருந்தது. இதனால், அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், வெளியிடங்களுக்கு வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர். பனி மூட்டத்தால் சாலைகள் தெளிவாக தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றதை காண முடிந்தது. திருச்சி மாநகரின் அடையாளங்களில் ஒன்றான மலைக்கோட்டை பனிமூட்டத்தால் மூடப்பட்டு காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 8-30 மணி வரை நீடித்தது. இதேபோல கடந்து சில நாட்களாக மதிய நேரங்களில் வெயில் கொளுத்துவதும், அதிகாலை நேரங்களில் பனி பெய்வதுமாக உள்ளது.
Comments are closed.