திருச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையால் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 19-ம் தேதி பொது ஏலம்…!
திருச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையால் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 19ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட எஸ்பி ராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த பொது ஏலமானது, மார்ச் 19-ம் தேதி இருப்புப்பாதை மாவட்ட காவல் அலுவலகம் கிராப்பட்டியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு உண்டான காவல் வாகனங்கள் காவல் அலுவலக வளாகத்தில் மார்ச் 17ம் தேதி காலை 10 மணி முதல் வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புவோர் மார்ச் 19 ம் தேதி காலை 7 மணிமுதல் 10 மணி வரை ரூ.1000 முன்வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரியுடன் சேர்த்து ஏலம் முடிவடைந்த பின்னர் உடனே செலுத்த வேண்டும். ஏலம் எடுக்க வருவோர் அவசியம் ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.