Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 39, 40-வது வார்டுகளை இணைக்கும் வகையில் ரூ.1 கோடியே 31 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம்- * 2 அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் -3 வார்டு எண் 39, 40 பகுதியை இணைக்கும் கவுருகரை வாய்க்காலின் குறுக்கே நியூ டவுன் முத்துநகர் பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இப்பாலமானது மூலதன மானிய நிதி 2023- 2024 ன் கீழ் ரூ.1 கோடியே 31 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதன்மூலம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல் பள்ளிக்கு செல்ல எளிதான முறையில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு பயணம் செய்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக நேரத்தில் நெடுஞ்சாலையில் திரும்புவதால் பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சிவக்குமார் மற்றும் நலச்சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்