வெளிநாடுகளில் பணியாற்ற “சூப்பர் சான்ஸ்” நர்சிங் முடித்த மாணவிகளுக்கு 2 மாத இலவச பயிற்சி-* மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தகவல்
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினர் மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு தாட்கோ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. இதனடிப்படையில் மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி, எம்.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக இரண்டு மாதமும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோ மூலம் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, திருச்சி – 620 001 என்ற முகவரியிலோ அல்லது 0431-2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ADVERTISEMENT…👇
Comments are closed.