Rock Fort Times
Online News

கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜி நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் “ரெய்டு”…!

தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில் இன்று(06-03-2025) கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பழனியப்பா நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர், கொங்கு சுப்பிரமணியன், சக்தி மெஸ் கார்த்தி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2023 ம் ஆண்டு ஏற்கனவே அங்கு சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்