திமுக மூத்த நிர்வாகி அன்பில் தர்மலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
திமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சர் மற்றும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் முன்னாள் கழக செயலாளருமான புரவலர் அன்பில் தர்மலிங்கம் 32-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ. லியோனி, கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.