Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி பாலியல் பலாத்காரம்- முதியவர் உள்பட 3 பேர் கைது…!

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தது. அந்த சிறுமியை அதே ஊரை சேர்ந்த சின்னத்தம்பி(வயது 70) மதன்குமார் (19), மதன் ( 30) ஆகிய மூன்று பேரும் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதனை படம் எடுத்து மற்றவர்களிடம் காண்பித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசால் கொடுக்கப்படும் நிவாரண தொகைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்